நேர்காணல் கார்த்திகா சுவேந்திரநாதன்
Everystory Sri Lanka presents the first thirty stories from our ongoing work to create a compendium of Sri Lankan women’s stories — featuring those whose lives, work, and experiences have shaped and are shaped by Sri Lanka’s social, political, and cultural contexts.
From the Stories of Sri Lankan Women Archive — Angel Queentus
ஏஞ்சல் குயின்டஸ் ஆணாதிக்க கட்டமைப்புகளின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் கௌரவாமாகவும் தமது உரிமைகளை அனுபவித்து வாழக் கூடிய சூழலை உருவாக்குவதை தனது கனவாக கொண்டு தனது செயல்வாதங்களை மேற்கொண்டு வரும் ஒரு இளம் மனித உரிமை செயற்பாட்டளர்.
சமூகத்தால் வரையறுக்கப்பட்ட பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால் பால், பால்நிலை,பாலியல்பு என்னும் வகைப்படுத்தலின் பல்வகைமை காணப்படுகின்றது. ஏஞ்சல் பிறக்கும் போது சமூகத்தின் வரையறைக்கமைய ஒரு ஆணாக அடையாளப்படுத்தப்பட்டு ஆணாக வளர்க்கப்பட்டு தற்போது ஒரு திருநங்கையாக வாழப் போராடிக் கொண்டிருக்கின்றார்.
பால், பால்நிலை, பாலியல்பு என்பது பொதுவாக சமூகத்தில் பெண் அல்லது ஆண் என்ற இருமைக்குள் மாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஒன்றில் பெண்ணாக அல்லது ஆணாக இருக்க வேண்டும் என்கின்றது சமூகம். ஒரு நபர் பிறந்தவுடன் அவரின் பிறப்புறுப்பை வைத்து கொண்டு அவர் பெண் அல்லது ஆண் என்று தீர்மானித்து அதற்கமைய அவரின் நடை, உடை, பாவனை, நடத்தைகள், தெரிவுகள் என்பனவற்றை சமூகமே தீர்மானிக்கும். இதுவே பால்நிலை ஆகும். ஆனால் பால்நிலை என்பது ஒரு தனி நபரின் உணர்வு, விருப்பம், உரிமை, தெரிவு, சுதந்திரம் ஆகும். ஒருவர் தன்னை என்னவாக உணர்கின்றாரோ அதன் அடிப்படையில், தான், எவ்வாறு இருக்க வேண்டும், தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனை தீர்மானிப்பதற்கான உரிமை அவரவர்க்குண்டு.
ஏஞ்சல் யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு ஒரு நடுத்தர கிறிஸ்தவ குடும்பத்தில் சமூக வரையறைக்கமைய அடையாளப்படுத்தப்பட்ட ஆண் பிள்ளையாக பிறந்து ஆணாக வளர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தில் இவர் மூன்றாவது பிள்ளை. அவருக்கு ஒரு அக்காவும், அண்ணாவும் இரண்டு தம்பிமாரும் உள்ளனர்.
ஆண் பிள்ளையாக வளர்க்கப்பட்ட ஏஞ்சல் காலப்போக்கில் தன்னை ஒரு பெண்ணாக உணரத் தொடங்கியதைத் தொடர்ந்து தான் ஒரு பெண்ணாக, ஓரு திருநங்கையாக வாழ்வதற்காக அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்றாh.
இவர் தனது சிறுபராயத்தில் ஆண் பிள்ளையாக வளர்க்கப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது வயதுகளில் தனது விருப்பங்கள், நடத்தைகள், தெரிவுகள் யாவும்; பெண் பிள்ளைகளை ஒத்ததாகவே இருப்பதாக உணரத் தொடங்கி இருந்தார். “எனது உடல் ஆணுக்குரியது மாதிரி; இருந்தாலும், நான் ஒரு பெண்பிள்ளை என்பதாகவே எனக்குள் உணர்ந்தேன். இதனால் எனக்கு எனது உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் எனக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் அன்றாட வாழ்க்கை போராட்டமாகவே இருந்;தது” என்று கூறினார்.
ஏஞ்சல் ஒரு ஆண்பிள்ளையாக ஏனைய ஆண் சகாக்களுடன் இணைந்து பழகுவதில் அசௌகரியம் அடைந்த நிலையில்; பெண் பிள்ளைகளுடன் இணைந்து பழகுவதனையே சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தார். ஏஞ்சலால்; சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கும் வரையறைக்கும் அமைய ஏனைய ஆண் பிள்ளைகள் மாதிரி நடக்கமுடிவில்லை. இதன் காரணமாக ஏஞ்சல் பால்நிலை பாரபட்சங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். தனது குடும்பத்திலும், பாடசாலையிலும் வெளி சமூகங்களிலும் குற்றவாளியை போல் நடாத்தப்பட்டும், கேலிகள், பாலியல் சேட்டைகள் மற்றும் பல உடல் ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்கபட்டார்.
இதன் விளைவாக ஏஞ்சல்; அவரால் விரும்பிய பாடசாலைக்கோ, விரும்யிப தனியார் வகுப்புகளுக்கோ செல்ல முடியவில்லை. விரும்யிப விளையாட்டுகளில் பங்குபெற முடியவில்லை. மேலும் ஏஞ்சலால் எவ்வளவு முயன்றும் தனது உயர் கல்வியை தொடர முடியவில்லை. பல்கலைக்கழகம் செல்லமுடியவில்லை. இதனால் தற்போது வரைக்கும் அரச மற்றும் ஏனைய தொழில்கள் பெற முடியாமல்; போதிய வருமானம் ஈட்டுவதில் பல சிக்கல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு தனது பெண்மையை உணரத் தொடங்கிய நாட்களில் இருந்து பல சவால்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட ஏஞ்சல் தனது திறமையால் தனது அடையாளம் பற்றி சமூக வலைத்தளங்களில் தேடிக் கற்றுக் கொண்டு தான் விரும்பியவாறு தனது பால்நிலையை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தார். தனது உறுதியான தீர்மானத்தின் பின்னர் சில மருத்துவ முறைகள் மூலமும் சட்டரீதியாக தனது பிறப்பு சான்றிதழை மாற்றிக் கொண்டும் தனது அடையாளத்தினை தான் விருழ்பியவாறு மாற்றிக் கொண்டார்.
எனினும் சமூகம் ஏஞ்சலை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. இதனால் இன்று வரையும் தொடர்ச்சியான பாரபட்சங்களுக்கு இவரது பால்நலை காரணமாக முகம்கொடுக்க நேரிடுகின்றது. இவரினால் சுதந்திரமாக வெளியே நடமாடக் கூட முடியாதநிலை காணப்படுகின்றது. எங்கே இந்த சமூகம் தன்னை வன்முறைக்கு உட்படுத்திவிடுமோ என்று பயம் அவரிடம் தொடர்ந்தும் காணப்படுகின்றமையினால் ஒரு திருநங்கையாக அன்றாடம் தனது பாதுகாப்பான வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்.
மேலும் ஒரு திருநங்கையாக அல்லது பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தும் போது ஏஞ்சல் பால்நிலை என்ற அடிப்படையில் மட்டுமல்லாது அவரின் பால், பாலியல்பு, இனம், மதம், சாதி, பிரதேசம், வர்க்கம் மற்றும் மொழி போன்ற பல விடயங்;களின் சேர்க்கையால் மென்மேலும் ஒடுக்குமுறைகளுக்கும் சமூகத்தின் பலவிதமான பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்.
இவ்வாறானதொருநிலையில் ஏஞ்சலிற்கு கிடைத்த நட்பு வட்டங்கள் அதாவது LGBTQI+ (பால், பால்நிலை, பல்வகை பாலியல்பு குழுக்கள்) சமூகத்தினர் பெண்ணிலைவாதிகள் அதன் மூலம் அவருக்கு கிடைத்த பயிற்சிகள் அனுபவங்கள் அவரது சுயத்தை பல கேள்விகள் கேட்டு பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால் சிந்திப்பதற்கும் அதன் அடிப்படையில் தனது செயல்வாதங்களை ஆரம்பிப்பதற்கும் அவரது தோழமை வட்டங்கள் பக்கபலமாக இருக்கின்றன.
ஏஞ்சல் பால், பால்நிலை, பாலியல்பு எனும் வகைப்படுத்தலின் பல்வகைமையின் மீது நம்பிக்கை கொண்டவராக தமது சமூக மாற்றங்களுக்கான பயணத்தில் தனியாகவும் கூட்டாகவும் இணைந்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வுருகின்றார். பால், பால்நிலை, பாலியல்பு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பம், உரிமை, சுதந்திரம் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு LGBTQI+ (பால், பால்நிலை, பல்வகை பாலியல்பு குழுக்கள்)சமூகத்தினர் குறிப்பாக திருநங்கையினர் சமூகத்தில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படாது, ஆணாதிக்க கட்டமைப்புகளின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் கௌரவாமாகவும் தமது உரிமைகளை அனுபவிக்க கூடிய சூழலை உருவாக்குவதை தனது கனவாக கொண்டு செயற்பட்டு வருகின்றார்
இதற்கமைய ஏஞ்சல் 2019ம் ஆண்டு தொடக்கம் யாழ் திருநர் வலையமைப்பு என்னும் ஒரு தளத்தினை (Jaffna Transgender Network) தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினர். அதற்கு தற்போது பணிப்பாளாராக உள்ளார். யாழ்ப்பாணத்தில் திருநர்கள் சந்தித்து தமது தேவைகளை கதைப்பதற்கு பாதுகாப்பான தளம் இல்லாததனை உணர்ந்து உருவாக்கப்பட்டதே இவ்வலையமைப்பாகும். இவ்வலையமைப்பினுடாக திருநர்கள் வல்லமையடைதலுக்காக உரிமைகள், தலைமைத்துவம் சார்ந்த பயிற்சிகள், வாழ்வாதார நடவடிக்கைகள், தேவைகளின் பொருட்டு உளவள ஆலோசனைகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் சமூகத்தின் ஒடுக்குமுறைகளுக்குப் பயந்து திருநர்கள் ஒதுங்கி இருக்காமல் LGBTQI+ (பால், பால்நிலை, பல்வகை பாலியல்பு குழுக்கள்) சமூகத்தினர் பற்றிய புரிதலை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக அவர் இளைஞர்களுடன் சேர்ந்து பல செயற்பாடுகளை ஆற்றத்தொடங்கியுள்ளார்ஃ அந்த வகைகயில் ஏஞ்சல் தனியாகவும், கூட்டாகவும் சமூகத்தில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பல செயற்பாடுகளை செய்வதனுடாக அவர்களோடு தோழமை வட்டங்களை உருவாக்கியுள்ளார். இதனுடாக ஏஞ்சல் இளைஞர்கள் மத்தியில் LGBTQI+ (பால், பால்நிலை, பல்வகை பாலியல்பு குழுக்கள்) சமூகத்தினர் பற்றிய புரிதல் தோன்ற காரணமாக இருக்கின்றார்.
இவ்வாறாக ஏஞ்சல் தோழமை வட்டங்கள் மேல் நம்பிக்கை கொண்டு அதனை விரிவடையச் செய்வதனுடாக சமூகத்தில் LGBTQI+ (பால், பால்நிலை, பல்வகை பாலியல்பு குழுக்கள்) சமூகத்தினர் பற்றிய சிந்தனை தெளிவுகளும் புரிதல்களும் ஏற்படுத்தும் முகமாக தனது சமூகநீதிக்கான பயணத்தை தொடர்கின்றார்.
(கார்த்திகா சுவேந்திரநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆர்வலர். இவர் பெண்ணிலைவாத செயல்வாதங்களை வேட்கையாக கொண்டு பயணிக்கும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் பால்நிலை, பெண்கள் உரிமைகள் தொடர்பான வளவாளர், பயிற்றுவிப்பாளர்.)
Reference Links and Further Reading
எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..! | தினகரன் (thinakaran.lk), 7th February 2021
APTN_Amplifying-Trans-Advocacy_2020-Fellows-Bios.pdf, weareaptn.org, https://weareaptn.org/wp-content/uploads/2020/09/APTN_Amplifying-Trans-Advocacy_2020-Fellows-Bios.pdf
Beyond “Funny Boy” towards Solidarity (co-authored by Angel Queentus), Myanmai (Also published on the Tamil Guardian), 16th December 2020, https://maynmai.medium.com/beyond-funny-boy-towards-solidarity-b996f200075f
Cultural Barriers to Gender Transition Surgery, ft.lk, 21st April 2021, http://www.ft.lk/opinion/Cultural-barriers-to-gender-transition-surgery/14-716552
Jaffna Transgener Network, Facebook Page, https://web.facebook.com/jaffnatransgendernetwork/?_rdc=1&_rdr
Notes
This article is pending support to be translated into Sinhala and English. Please email storiesofslwomen@everystorysl.org if you would like to support us with translations or if you have any questions.
Comments