"பெண்ணியம், வடிவமைப்பு மற்றும் படைப்பாற்றல்" பற்றிய அக்டோபர் வாசிப்பு பட்டியல்

அக்டோபர் 2023

இவ் வாசிப்புப் பட்டியலானது இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த பல்துறை வடிவமைப்பாளரான திலினி பெரேராவினால் தொகுக்கப்பட்டது. தற்போது, அவர் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் வடிவமைப்பு மற்றும் தகவல் தொடர்பு மேலாளராக உள்ளார். வாசிப்புப் பட்டியலை தொடர்ந்து திலினியின்  சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை காணலாம்.

 

Paula Scher’s MAPS, image source

வடிவமைப்பு என்றால் என்ன? "சிறந்த" வடிவமைப்பு எது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

எளிமையான விளக்கத்தில்: கிராஃபிக் வடிவமைப்பு என்பது எழுத்துருக்கள், படங்கள், வண்ணங்கள் மற்றும் எண்ணங்களினதும்  உணர்வுகளினதும் ஒழுங்குபடுத்தல்கள் ஆகும். வண்ணக் கோட்பாடு, பட உருவாக்கம், விளக்கப்படம் மற்றும் அச்சுக்கலை போன்றவற்றை பயன்படுத்தி அழகாகவும் ஒழுங்குபடுத்தியும் சின்னங்கள்(Logos), இணையதளங்கள், சுவரொட்டிகள், புத்தகங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை வடிவமைப்பாளர்கள் உருவாக்குகிறார்கள். நிகழ்நிலையிலும் (Online)  அகல்நிலையிலும்(Offline) (அச்சு மற்றும் இலத்திரனியல்) தகவல்களை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு அவை பயன்படுகின்றன. நாம் எவ்வாறு தகவலைப் பார்க்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் அந்தத் தகவல் நமக்கு எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது என்பதற்கு கிராஃபிக் வடிவமைப்பு முக்கியமானது.

பெண்ணியக் கண்ணோட்டத்தில் கிராஃபிக் வடிவமைப்பை ஆராய்வது என்பது, கட்புலத் தொடர்பாடல் மூலம் பாலின சமத்துவம், உள்ளடக்கம் (Inclusivity) மற்றும் சமூக நீதி ஆகியவற்றை ஆராய வடிவமைப்பைப் பயன்படுத்துவதாகும். இது படிவார்ப்புகளை (Sterotyoes) எதிர்க்கிறது, விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, மேலும் சமூக மற்றும் அரசியல் செயல்முனைவுகளில்  ஈடுபடுகிறது. பெண்ணியக் கொள்கைகளுடன் இணைந்த வடிவமைப்புகளை உருவாக்கவும்,  'உலகளாவிய' தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தவும்,  பன்முகத்தன்மை, இடைவெட்டு (Intersectionality), நெறிமுறை தரநிலைகள் போன்றவற்றை இந்த அணுகுமுறை முன்னுரிமைப்படுத்துகிறது.  

முக்கியமாக மேற்கத்திய/ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ள womxn மற்றும் BIPOC (கருப்பு, பழங்குடியினர் மற்றும் நிறமாந்தர்), கட்புலத் தொடர்பாடல்  மற்றும் கிராஃபிக் வடிவமைப்பாளர்களை இந்த தொகுப்பு காட்டுகிறது. அவர்கள் தரமான வடிவமைப்பு தொடர்பில் உள்ள  வழக்கமான கருத்துப்பாங்குகளை சவால் செய்து அதன் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியுள்ளனர். இந்தப் பட்டியலின் ஆரம்பப் பகுதியானது உலகின் வடக்கின் வடிவமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை குறிப்பிடுகிறது, அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், இத் தொழில்துறையின் இயக்கவியல் மற்றும் பரந்த அழகியல் அரசியலை கேள்விக்குட்படுத்த இது நம்மை ஊக்குவிக்கிறது என்பதையும் முக்கியமாக கருத்தில் கொள்ளவும். 

Gender + Design

ஒரு பெண்ணிய வடிவமைப்பாளராக வருவதற்கு, ஒரு குறிப்பிட்ட கையேடோ அல்லது முறையான கோட்பாடோ  இல்லை. இருப்பினும், ஒரு வடிவமைப்பாளராக உங்கள் பயணத்தின் போது, சமூகத்தில் வடிவமைப்பின் பங்கைப் புரிந்துகொள்வது மற்றும் ஆழமாக ஆராய்வது, உங்களது இலக்கு நேயர்களை(intended audience) கருத்தில் கொள்வது என்பன இயற்கையாகவே பாலினம் மற்றும் வடிவமைப்பு சிக்கல்களை முன்னணியில் கொண்டு வர கூடியவை என ஒருவர் வாதிடலாம்.

அழகியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கும் திறமையான வடிவமைப்பாளர்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு பட்டியலைத் தொகுக்காமல், வித்தியாசமான அணுகுமுறையை ஆராய்வதில் என்னுடன் இணைய உங்களை அழைக்கிறேன். சிறந்த வடிவமைப்பின் அடிப்படையை சவால் செய்து கேள்வி எழுப்பிய, பாரிய அளவில் அறியப்பட்ட மற்றும் பெருமளவில் அறியப்படாத  படைப்பாற்றல் கொண்டவர்களை இதில் உள்ளடக்கியுள்ளேன். ஒரு வடிவமைப்பு யாருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே முக்கியமா என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் அதே வேளை, வடிவமைப்பின் கட்புல  அழகியலுடன் இணைந்து, வடிவமைப்பு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துவோம்.

Söre Popitz, Image source

Söre Popitz, poster for Bode Gymnastik, 1925/1930. Poster paper, 44.9 x 59.8 cm. Bauhaus Dessau Foundation I 44251 / loan from Wilma Stähr

Going back to the early 1900’s we come across Söre Popitz, who studied typography with tycoons such as Jan Tschichold, and design with László Moholy-Nagy + Herbert Bayer. The Bauhaus, a German art school functional from 1919 to 1933, was significant for its transformative influence on art, design, and architecture. By uniting art with functionality, it pioneered the concept of creating objects that were not only visually appealing but also useful. Söre is known as Bauhaus’ only known woman graphic designer, this in itself is a huge accomplishment as the Bauhaus initially reflected the patriarchal norms of its time, with women often confined to certain workshops (weaving was the only workshop women could join in). However, notable woman artists like Anni Albers and Gunta Stölzl also made significant contributions and challenged traditional gender roles at the Bauhaus. As the school evolved, it became more inclusive, opening doors for women in various disciplines and contributing to greater gender equality in art, design, and architecture.

Anni Albers: Notebook 1970–1980. Image source

Moving from Europe to America, you find (one of my favourites) Sylvia Harris. Sylvia was an African-American graphic designer and design strategist and has been considered a pioneer in the field of social impact design. Born in 1953, Sylvia attended a newly desegregated school and recalled firsthand accounts of prejudice and encounters with the KKK. Because of her experiences, she became interested in creating more opportunities for representation and including voices from underrepresented communities.

Voting by Design poster, 2003 Client: University of Minnesota Design Institute; Design firm: Sylvia Harris LLC; Creative Directors: Janet Abrams, Sylvia Harris; Designers: Kathleen Meany, Leia Taylor

Lincoln Center for the Performing Arts Environmental Branding Study, 2000

Incomplete Design History podcast இல், 'சில்வியா ஹாரிஸ் ஒரு பொது வடிவமைப்பாளராக விபரிக்கப்பட்டுள்ளார், அவரது சொந்த வார்த்தைகளில் ஆவர் ஒரு குடிமகள் வடிவமைப்பாளர் (citizen designer), ஆனால் நீங்கள் எப்படி விரும்பினாலும் சொல்லலாம், ஹாரிஸ் மக்களின் நன்மைக்காக வடிவமைக்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள வடிவமைப்பாளர். மக்களின் உலகிற்கு அவர்களை வழிநடத்த உதவும் வடிவமைப்புகளை உருவாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார்.

அமெரிக்காவில், புத்தாக்க கல்வியாளரும் வடிவமைப்பாளருமான  Muriel Cooper, MIT யில் பணியாற்றிய தனது நான்கு தசாப்த காலத்தில், சமகால ஊடகங்கள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க, ஆனால் பெரிதளவில்  கவனிக்கப்படாத அடையாளத்தை விட்டுச் சென்றார். ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் இடைவெட்டு (intersection) பற்றிய பயனுள்ள உள்நோக்குகளை வழங்கும், இவரின் TED talk from 1994 on information landscapes பேச்சைப் பார்க்க நான் குறிப்பாக பரிந்துரைக்கிறேன். 

தகவல் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
— முரியல் கூப்பர்

Susan Kare மற்றொரு குறிப்பிடத்தக்க சமகால அமெரிக்க கிராஃபிக் வடிவமைப்பாளர் ஆவார். 1980 களில், அவர் ஆப்பிள் மேகிண்டோஷிற்கான (Apple Macintosh) இடைமுக (interface) கூறுகளை உருவாக்கினார். அவர் ஆப்பிளை விட்டு வெளியேறிய பிறகு ஸ்டீவ் ஜாப்ஸால் நிறுவப்பட்ட NeXT நிறுவனத்தில் படைப்பாற்றல் பணிப்பாளராக பணியாற்றினார். This talk on icons and designs பற்றிய இந்த உரையாடல் அவரது பணியை ஆராயும் தகவல் செறிவுமிக்க ஒரு காணொளியாகும்.

Macintosh Icons by Susan Kare, image source

இந்தப் பட்டியல் முடிவற்றதும் முழுமை பெறாததும் ஆகும். இந்தத் துறை எந்த அளவிற்கு விரிவடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள, கீழ்வரும் வடிவமைப்பாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பார்க்குமாறு  உங்களை நான் ஊக்குவிக்கிறேன். Paula Scher, Jessica Walsh  மற்றும்  Leta Sobierajski போன்ற வடிவமைப்பாளர்கள் இன்னும் அமெரிக்க வடிவமைப்புத் துறையில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் கலை இயக்கம், அச்சுக்கலை மற்றும் அனைத்து கிராஃபிக் வடிவமைப்புகளிலும், Gail Anderson மற்றும் Ellen Lupton போன்ற வடிவமைப்புக் கல்வியாளர்களுடன் இணைந்து, அவர்களின் வியக்கத்தக் கண்ணோட்டத்துடன் இத் துறையில் முன்னணி வகிக்கின்றனர் -  அவரது சுவாரசியமான மற்றும் தகவல் செறிவுமிக்க ரீல்களை Grids மற்றும் Rules இல் பார்க்கவும்!

Identity and graphic design created for The Public Theatre by Paul Scher

Jessica Walsh, Aizone Campaign. Image source

அச்சுக்கலை தொடர்பில்

அச்சுக்கலை உலகில் நாம் நுழையும் போது, லூயிஸ் ஃபிலி (Louis Fili) மற்றும் ஜெசிகா ஹிஸ்சே(Jessica Hische) போன்ற வடிவமைப்பாளர்கள் எம்மில் உள்ளனர் - இவர்கள் வெஸ் ஆண்டர்சனின் திரைப்படமான தி மூன்ரைஸ் கிங்டமிற்கான (The Moonrise Kingdom) பிரத்தியேக எழுத்துரு வடிவமைப்பிற்காக அறியப்பட்டவர்கள்.

An assortment of packaging and labels designed by Fili. Image Source

எலிசபெத் ஃபிரைட்லேண்டரைப் பற்றிய இந்தக் கட்டுரை, 1927 ஆம் ஆண்டில் ஃபிராங்ஃபர்ட்டை தளமாகக் கொண்ட பாயர் டைப் ஃபவுண்டரியில் (Bauer Type Foundry) அவரது பணி தொடர்பில் விளக்குகிறது, அங்கு தான் எலிசபெத் ஃபிரைட்லேண்டர் எழுத்துரு வடிவமைத்த முதல் பெண்களில் ஒருவரானார்.

Elizabeth Friedlander. Designs for Penguin Books 25th anniversary, 1960. Paint and ink on paper, courtesy of Elizabeth Friedlander Collection, Special Collections & Archives, UCC Library, University of College Cork, Ireland; the Ditchling Museum of Art and Craft, England.

கனடாவில், அச்சுக்கலைஞரும் வடிவமைப்பாளருமான Marian Bantjes, தனித்துவமான எழுத்துக்கள், சிக்கலான வடிவங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்புகளை உருவாக்க பல்வேறு கோணங்களில் இருந்து உத்வேகத்தினை பெறுகிறார். Intricate Beauty by Design பற்றிய அவரது TED பேச்சைப் பார்க்கவும்.

Dr. Sumanthri Samarawickrama, Image Source

எமது உள்ளூர் சூழலில், கலாநிதி சுமந்திரி சமரவிக்ரம சிங்கள எழுத்துக்களின் வளர்ச்சியை ஆராய்வதில் முக்கியமான பங்கை வகிக்கிறார். அவரது ஆராய்ச்சிகள் இந்த தகவல் காணொளிகளில் [1] [2]  திறம்பட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தியாவை தளமாகக் கொண்ட November சுயாதீன வடிவமைப்பு ஸ்டுடியோ, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய வடிவமைப்புக் கல்வி மற்றும் பிராந்தியத்தில் வடிவமைப்பு கலாச்சாரத்தின் இயக்கவியல் பற்றிய பயனுள்ள உள்நோக்குகளை வழங்குகிறது. இந்திய வடிவமைப்பில் பன்மைத்துவம் மற்றும் அதிகார இயக்கவியல் (Power Dynamics) பற்றிய இந்தக் ட்டுரையைப் படிப்பதன் மூலம் அவர்களின் பணிகளைப் பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் பெறலாம்.

November, poster design, Image Source

நீங்கள் எழுத்து மற்றும் அச்சுக்கலையில் ஆர்வமுள்ளவராக இருந்தால், இது தொடர்பில் ஆராய Women in Type ஒரு சிறந்த இடமாகும்.

புத்தகங்கள் தயாரிப்பது தொடர்பில் 

புத்தக வடிவமைப்பு உலகில், 'புத்தகங்களின் ராணி' Irma Boom குறிப்பிடுகிறார்,

நான் எனது வேலையை கட்டிடக்கலையுடன் ஒப்பிடுகிறேன், நான் மாளிகைகளை கட்டவில்லை, நான் சமூக வீடுகளை கட்டுகிறேன். புத்தகங்கள் தொழில் ரீதியாக தயாரிக்கப்படுகின்றன, அவை மிகவும் சிறப்பாக செய்யப்பட வேண்டியவை. நான் தொழில்துறை உற்பத்திகளை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் ஒரு முறை மட்டும் செய்யப்படுபவற்றை வெறுக்கிறேன். ஒரு புத்தகத்தில் நீங்கள் எதையும் செய்யலாம், ஆனால் நீங்கள் அச்சிட்டால், அது ஒரு சவால். அது ஒருபோதும் கலை இல்லை. ஒருபோதும் இல்லை, ஒருபோதும் இல்லை, ஒருபோதும் இல்லை.

Irma Boom: The Architecture of the Book (miniature edition, Lecturis, 2013). Each book has a stitched softcover binding and coloured edges, and is packed in a box.

இன்று, பூமின் தொழில் வாழ்க்கையைப்   (Boom’s career) பின்பற்ற முயற்சிக்கும் வளர்ந்து வரும் ஒரு வடிவமைப்பாளர் தீர்க்க முடியாத சவால்களை எதிர்கொள்வார். காபி டேபிள் புத்தகங்களின் வகையிலும் அடங்காத  பூமின் புத்தகங்கள், வழக்கமான காகித அட்டைகளில் (paperbacks)  இருந்து தனித்து நிற்கின்றன. அவை பரந்த பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, ஒரு நடைமுறை நோக்கத்தினை பூர்த்திசெய்பவை, இதனால் தான் இவற்றை, "சமூக வீடுகளுக்கு" இணையாக அவள் பார்க்கிறாள். யாரேனும் ஆராயும் எந்தவொரு கருத்து அல்லது பொருளின் சாரத்தையும் அவை முழுமையாக வழங்குக்கின்றன. 

எமது சமூகத்தில் நூல்களை உருவாக்கும் துறையில், வெளியீட்டாளரும் பொறுப்பாளருமான  Sharmini Pereria, Raking Leaves முன்னணியில் இருக்கிறார். இந்த இலாப நோக்கற்ற, சுயாதீன வெளியீட்டு அமைப்பு, தெற்காசியாவின் புவிசார் அரசியல் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளை ஆராய்வதில் கவனம் செலுத்தி, கலை நூல்களை தயாரித்து வருகிறது. ரேக்கிங் லீவ்ஸ் (Raking Leaves) ஒரு புத்தகத்தின் கருப்பொருளை மறுவரையறை செய்வதற்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்கிறது. "“The Incomplete Thombu” மற்றும் “The Speech Writer” (ஒரு பெட்டியில்[slipcase] உள்ள பத்து புத்தகங்களின் [flip books] தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது) போன்ற படைப்புகள் புத்தக வடிவமைப்பு மற்றும் நீளமான கதைசொல்லல் பற்றிய எனது பார்வையை ஆழமாக மாற்றியமைத்துள்ளன.

Bani Abidi, The Speech Writer, 2012, artist’s book, published by Raking Leaves.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று People’s Graphic Design Archive (மக்கள் கிராஃபிக் டிசைன் காப்பகம்) ஆகும். இது கிராஃபிக்  வடிவமைப்பு வரலாற்றை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்தி பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, கூட்டவழி மூலம் தகவல்களை (crowd-sourced) பெறும் ஒரு மெய்நிகர் காப்பகமாகும். கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் அதனை உருவாக்கியவர்களின் துல்லியமான போக்குகளைப் புரிந்துகொள்ள இது போன்ற காப்பகத் திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Louise Sandhaus, Earthquakes, Mudslides, Fires & Riots: California and Graphic Design, 1936–1986 (Metropolis Books, 2014)

இது கிராஃபிக் வடிவமைப்பாளரான Louise Sandhaus (லூயிஸ் சாண்டாஸ்) உட்பட மூன்று பெண் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. பெரிதும் அங்கீகரிக்கப்படாத தமது வடிவமைப்புகளை, பார்வைக்கு அப்பால் பெட்டிகளில் சேமித்து வைத்திருந்த உள்ளூர் வடிவமைப்பாளர்களுடன் கலந்துரையாடிய பின்,  லூயிஸ் இலத்திரனியல் காப்பகம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்தார். வடிவமைப்புகளை அவ்வாறே காப்பகப்படுத்துவதற்கு  இடம், நேரம் மற்றும் பணம் ஆகியவை தேவைப்படுகின்றன, இவற்றை பெறுவதற்கான இயலுமை எல்லோருக்கும் இருப்பதில்லை. மேலும் இவற்றை காப்பகப்படுத்துவதற்கான இலகுவான இலத்திரனியல் முறை இல்லை எனில் இந்த மதிப்புமிக்க வரலாற்றை இழக்க நேரிடும். கிராஃபிக் வடிவமைப்பு வரலாற்றை மீள சிந்திப்பதற்கு காப்பகம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

Peoples Graphic Design Archive

சில நேரங்களில் சிறந்த தீர்வாக அமைவது எதையும் வடிவமைக்காமல் இருப்பதுதான் (இருப்பினும் ஒரு வடிவமைப்பாளரை வடிவமைக்க வேண்டாம் என்று சொல்வது மிகவும் எளிதானது அல்ல).
— தனா அப்துல்லா

பிரச்சாரமும்(advocacy) வடிவமைப்பும் 

உலகின் இந்தப் பகுதிக்கு மீண்டும் எங்கள் கவனத்தைத் திருப்பி பார்க்கையில், மீரா மல்ஹோத்ரா (Mira Malhotra) போன்ற வியக்கவைக்கும் வடிவமைப்பாளர்கள் இப்பகுதியில் உள்ளனர். படிமங்களை(Image) உருவாக்குவதை மையமாகக் கொண்ட இவரின் பணிகள், சுய-வெளியீடு, அரசியல், இசை, பெண்ணியம் மற்றும் உளநலம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை அடிப்படியாகக் கொண்டது.  அவரது தனித்துவமான பாணி கொண்ட கை-எழுத்தும்; ஒரு பிரகாசமான ஆஃப்பீட் வண்ணத் தட்டும்; பல விடயங்களை உணர்த்தும் கோடு மற்றும் அதில் உள்ள மாயை என்பன, பலரிடம் இருந்து பெற்ற அகத்தூண்டலின்  உத்வேகத்திலிருந்து வருகிறது.

Neon Girls, Image Source

ஷெசில் மாலிக் (Shezil Malik), சமூக-அரசியல் தலைப்புகள், பெண்களின் கதைகள் மற்றும் பெண்ணியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு வடிவமைப்பாளர்/ இலஸ்ட்ரேட்டர் ஆவார். அவர் டிஜிட்டல் கலை, வெளியீடுகள், துணி மற்றும் பொது கலை (Public Art) மூலம் சமூக தாக்க திட்டங்களில் பணியாற்றுகிறார். சர்வதேச மகளிர் தினத்தை அனுசரிப்பதற்காக இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், பெஷாவர் மற்றும் குவெட்டா போன்ற பாகிஸ்தானிய நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆரத் மார்ச் (பெண்கள் அணிவகுப்பு) க்கான (Aurat March (Women’s March)) அவரது எதிர்ப்பு சுவரொட்டிகள். அவரது சமீபத்திய திட்டமான இணையம் பெண்ணியவாதியாக இருக்க முடியுமா? (Can the Internet be Feminist?)  என்பது பெண்களும் பாலின சிறுபான்மையினரும் பாக்கிஸ்தானில் இலத்திரணியல் தளத்தை  எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்று கேட்கும் ஒரு வழியாகும்- மேலும் அவர்களின் அகல்நிலை வாழ்வில் பொது இடங்களில் எவ்வாறு இதனை முன் கொண்டு செல்கிறார்கள் என்பதுடன்  இணைப்பதற்கான ஒரு வழியும் ஆகும்.

Shezil’s posters for the Aurat March (Women’s March)

க்ருட்டிகா சுசர்லா (Kruttika Susarla) போன்ற ஏனைய வடிவமைப்பாளர்கள் அவர்களது உருவாக்கங்களில் திறமையான முறையில்  விளக்கப்படம் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பை ஒன்றிணைத்து, ஒரு மனதைக் கவரக்கூடிய கலவையை உருவாக்குகிறார்கள். மேலும், அவர் பல்வேறு சமூக நீதி காரணங்களுக்காக தனது வடிவமைப்புகள் மூலம் குரல் கொடுக்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள ஆர்வலர்.  முக்கிய சமூகப் பிரச்சனைகள் தொடர்பில் தனது வடிவமைப்பு திறமைகளை பயன்படுத்தி அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவதற்காக இவர்  செயற்படுகிறார். 

Privacy Supreme: Internet Freedom Foundation. Image Source

வடிவமைப்பாளர்களில் இருந்து குழுக்கள் தொடர்பில்- Fearless Collective பரந்த விவாதங்களை வளர்ப்பதற்கும், கூட்டுக் கற்பனை, ஆக்கப்பூர்வ சிந்தனை, சமூக உரையாடல் மற்றும் அழகுக்கான தளத்தை உருவாக்குவதற்குமான கருவிகளாக சுவரோவியங்கள், கலை மற்றும் வடிவமைப்பை, நெருக்கடி மற்றும் அவசர காலங்களில் கூட பயன்படுத்துகிறது. கலைஞர் ஷிலோ ஷிவ் சுலேமானால்(Shilo Shiv Suleman) 2012 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு உலகளவில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய பொது கலை முயற்சிகளில் ஈடுபடுகிறது.

Church Street, Colombo 02 by Vicky Shahjehan and Minal Naomi Wickrematunge: Image source

ஷிவானி பரஸ்னிஸின்(Shivani Parasnis) அச்சுக்கலை மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு பற்றிய ஆய்வு, புத்தாக்க வடிவமைப்பு அணுகுமுறைகள் தொடர்பில் ஆவலை தூண்டக்கூடிய தகவல்களை வழங்குகிறது. இதற்கிடையில், பிரேசிலில் டெரேசா பெட்டினார்டியின் (Tereza Bettinardi) வடிவமைப்புகள் தெற்குலகின்  தவிர்க்கமுடியாத பிரதிநிதித்துவமாக உள்ளது. அவரது பணி மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டங்களை ஆழமாக தெரிந்துகொள்ள சிறந்த ஆதாரமாக காணப்படும் அவரது Futuress கட்டுரையை நீங்கள் ஆராயலாம்.

Shivani Parasnis, Table Talk. Image source

The red-haired woman, Orhan Pamuk by Tereza Bettinardi [Companhia das Letras/TAG Livros, 2021]

வடிவமைப்பின் அரசியல் + சிறந்த வடிவமைப்பைச் செய்தல்

ஒரு வடிவமைப்பாளராக உங்கள் வகிபாகம், மற்றும் உங்கள் சிந்தனைகளும்  கிராஃபிக் வடிவமைப்பு திறன்களும், உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மீது எவ்வாறு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற, Futuress தளம் சிறப்பு மிக்க ஆதாரத்தை வழங்குகிறது. கிராஃபிக் வடிவமைப்பின் சமூக தாக்கங்களை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தொடக்க புள்ளியாக அமையக்கூடிய  அறிவுச் செறிவு மிக்க கட்டுரைகளின் தொகுப்பை இந்த தளம் வழங்குகிறது. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உள்ளடங்கும் சில ஆக்கங்கள் ஆவன: “On Caste சாதிப் பாகுபாடு பற்றிய சிக்கல்களை ஆராய்வது, “A Resource Hub for Decolonizing Typography ,  இது வடிவமைப்பு நடைமுறைகளின் காலனித்துவ நீக்கம் தொடர்பிலானது,  “Classism and Design: On the Social Implications of Studying Design,” வடிவமைப்பில் வர்க்கத்தின்  தாக்கம் தொடர்பில் ஆராய்கிறது, மற்றும்A Designerly Inventory,” இது சமூகத்தை வடிவமைப்பதில் வடிவமைப்பாளரின் பங்கை முழுமையாகப் பார்க்கிறது.

A Designerly Inventory. Illustration by Aude NasrImage source

மேலும், பரந்துபட்ட  சமூகக் காரணங்களுக்காக கிராஃபிக் வடிவமைப்பினை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, பெண்ணிய இயக்கங்கள் கிராஃபிக் வடிவமைப்பை சுய வெளிப்பாட்டிற்கான வழிமுறையாக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது பற்றிய ஒரு விளக்கமான கட்டுரை உள்ளது. சமூக நீதியை மேம்படுத்தவும், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட குழுக்களின் குரல்களை வலுப்படுத்தவும் கிராஃபிக் வடிவமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாக எப்படி இருக்க முடியும் என்பதை இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

Bertha Margaret Boyé “Votes for Women” poster, 1911. Image source

இந்த வளங்களை ஆராய்வதன் மூலம், சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பை செம்மைப்படுத்துவதில்  கிராஃபிக் வடிவமைப்பின் பன்முகப் பங்கு பற்றிய விரிவான புரிதலை நீங்கள் பெறலாம். வடிவமைப்பு என்பது ஒரு கட்புல நோக்கமாக மட்டும் இல்லாமல், மாற்றத்திற்கு குரல் கொடுக்கவும், கோட்பாடுகளை சவால் செய்வதற்கும், சமூக நீதிக்கான காரணங்களை மேம்படுதத்துவதற்குமான ஒரு வலுவான சக்தி என்பதை இது வெளிப்படுத்துகிறது. பெண்ணியம் மற்றும் வடிவமைப்பின் இடைவெட்டு அல்லது சமூகத்தில் கிராஃபிக் வடிவமைப்பின் பரந்த தாக்கம் போன்ற எதில் நீங்கள் ஆர்வமாக இருந்தாலும், இந்த வளங்கள் சமகால உலகில் வடிவமைப்பின் நிலை மாறக்கூடிய இயலுமை பற்றிய ஆழ்ந்த அறிவினை வழங்குகின்றன.


 

Not on Design, but equally important to read

Borderlands/La Frontera: The New Mestiza
Gloria Anzaldúa

Ways of Seeing
John Berger

Orientalism
Edward Said

 

Audio

Incomplet Design History
The Incomplet Design History podcast is to explore the overlooked, underrepresented, or ignored areas of graphic design history, tell those stories, and make graphic design history a little less Incomplete.
https://idh.fm/about

Design Matters by Debbie Millman
The world’s first podcast about design and an inquiry into the broader world of creative culture through wide-ranging conversations with designers, writers, artists, curators, musicians, and other luminaries of contemporary thought
https://www.designmattersmedia.com/

My Life In Design Podcast
Listen to how did some of the some of the world’s best designers, strategists, and agency leads, got into design and how they knew it was even a thing they could form a career around
Paula Scher, Liza Enebeis

Creative Boom
Conversations with creatives to uncover the secrets to success, and all the practical advice, funny stories and honest wisdom that will help you build a booming creative career.
Louis Sandhaus, Marina Willer, Gail Anderson, Shanti Sparrow, Annie Atkins

Reverberations by Zara Arshad
The Reverberations podcast was created to discuss marginalisation, underrepresentation and erasure in the UK’s cultural and creative sectors. Organised around three key themes — “institutions”, “divergent models”, and “decolonising design and culture” — season one of the podcast broadly focuses on history making, particularly in relation to design history. https://zara-arshad.com/Reverberations

 

Videos

Amélie (2001)

Everything made by Studio Ghibli and Wes Anderson
Especially Princess Mononoke , Spirited Away, Isle of Dogs and Fantastic Mr.Fox

Also, Everything made by Laika

Beyond The Visible — Hilma af Klint and Hilma (2022)
(all things Hilma!)

The Universe of Keith Haring (2008)

PressPausePlay (2011)

Can the Universal Be Specific? — Ruben Pater: The Politics of Design

Milton Glasser: To Inform and Delight

John Berger, Ways of seeing

Episode 1
Episode 2
Episode 3
Episode 4

Abstract: The Art of Design | Netflix

S01.E06: Paula Scher — Graphic Design
S02 E01 · Olafur Eliasson: The Design of Art
S02 E06 · Jonathan Hoefler: Typeface Design

Intercultural and decolonial: exploring frameworks for typographic practice with Rathna Ramanathan

Graphic Means

Typography in Exhibition Design — Irina Koryagina

Lino Type

Virgil Abloh Everything in Quotes

Virgil Abloh Insert Complicated Title Here

Paula Scher: Great design is serious (not solemn)


இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த பல்துறை வடிவமைப்பாளரான திலினி பெரேரா, உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் பெண்ணிய அமைப்புகளான Frida Fund, Urgent Action Fund மற்றும் CREA போன்வற்றுடன் இணைந்து செயற்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். அவரது நிபுணத்துவமானது வரைகலை மற்றும் தலையங்க வடிவமைப்பு, தரவு காட்சிப்படுத்தல், அரங்க வடிவமைப்பு, திரைப்படங்களுக்கான கலை இயக்கம், கண்காட்சி வடிவமைப்பு மற்றும் வலைத் திட்டங்கள் என பரந்துபட்டது. இலங்கையின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகமான மத சுதந்திர அருங்காட்சியகத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். தற்போது, அவர் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் (Geoffrey Bawa Trust) வடிவமைப்பு மற்றும் தகவல்தொடர்பு மேலாளராக உள்ளார், அங்கு அவர் பாவா 100 திட்டம் மற்றும் கொழும்பிலும் புதுடில்லியிலும் காட்சிப்படுத்தப்பட்ட ஜெஃப்ரி பாவா காப்பகத்தின் (Geoffrey Bawa archive) கண்காட்சி உட்பட பல்வேறு திட்டங்களை வழிநடத்துகிறார், Geoffrey Bawa: Drawing from the Archives என்ற வெளியீட்டை சுவிஸ் வெளியீட்டாளர் லார்ஸ் முல்லர் பப்ளிஷர்ஸ் (Lars Müller Publishers) உடன் இணைந்து வடிவமைத்தார்.

Next
Next

Narrative Reading List on Women and the City