“அம்மாக்களும் மகள்களும்” பற்றிய வாசிப்புப் பட்டியல்

மே 2023

இளம் பெண்ணிய வலையமைப்பின் இளநிலை திட்ட மேலாளராக, ESSL குழுவில் அண்மையில்

இணைந்து கொண்ட துலண்தி குணசேகரவால் தொகுக்கக்கப்பட்டது.

விளக்கபடம் - ஜாய் லக் கிளப்பில் இருந்து

“பெண்கள் மீதான அடக்குமுறை நம்மிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக தாய் மற்றும் மகள்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் சமூகத்தில் பெண்கள் தாயை மதிக்க முடியாது; தங்களை மதிக்க முடியாது.”

- ஜூடித் அர்கானா (அவ மதர்ஸ் டாடர்ஸ் /Our Mother’s Daughters)

“;தாய்-மகள் உறவு” என்ற வார்த்தையைக் கேட்கும் போது நம் மனதில் பொதுவாக தோன்றும் காட்சி, பெரும்பாலும் சிக்கலானது மற்றும் மோதல்கள் கொண்டது. தாய்-மகள் உறவு என்பது வரலாறு, இலக்கியம் மற்றும் ஊடகங்களில் பல்வேறு கண்ணோட்டங்களில் விளக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய சில விளக்கங்கள், இந்த உறவை வடிவமைக்கும் நுணுக்கங்கள் மற்றும் கட்டமைப்பு காரணிகளை குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன

தாய்-மகள் உறவை செதுக்குவதில் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு ரீதியான பங்கு தொடர்பில் அறிந்து கொள்வதற்கு தொடங்கக் கூடிய சிறந்த இடம், ஆசிய கலாச்சாரங்களில் மகள்களை சுமக்கும் தாய்மார் மற்றும் மகள்களின் குறை மதிப்பீடு  பற்றி ஆய்வு செய்யும் மோனிகா தாஸ் குப்தாவின் அறிவியல் அமெரிக்காவில் வெளிவந்த இந்தக் கட்டுரை ஆகும்.

பேசப்படாதவற்றின் குரல் - சுசரிதா சர்க்காரின் இந்திய மகள்கள் தாய்மார்களை எழுதுகிறார்கள், இது மகன்களைப் பெற்றெடுக்கும் தாய்மாரை மகிமைப்படுத்தும் அதேவேளை மகள்களை பொறுப்புக்களாகக் கருதும் தெற்காசிய கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்றை ஆராய்கிறது. மகள்கள் தொடர்பிலான குறைமதிப்பீட்டின் காரணமாக, தாய்-மகன் உறவானது தாய்-மகள் உறவை விட மேலோங்கி நிற்கிறது. சர்க்கார் தனது கட்டுரையில், கதைசொல்லல் மற்றும் பெண்களின் கதைகளை வெளிப்படுத்தல் போன்றவற்றை  தாய்-மகள் உறவுகளை சிறுமைப்படுத்துவதை எதிர்க்கும் ஒரு வடிவமாக ஆராய்கிறார்.

“ஆணாதிக்கத்தின் வரலாற்றில் இந்த உறவு குறைத்து மதிப்பிடப்பட்டது மட்டுமல்லாமல் முக்கியத்துவம் அற்றதாகவும் காணப்படுகிறது”. இறையியல் கோட்பாடாக இருந்தாலும் சரி, கலையாக இருந்தாலும் சரி, சமூகவியலாக இருந்தாலும் சரி, மனோதத்துவக் கோட்பாடாக இருந்தாலும் சரி, தாய்  மகன் உறவே நிலையான மற்றும் உறுதியான ஒன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இறையியல், கலை மற்றும் சமூகக் கோட்பாடு ஆகியவை மகன்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக பெண்களுக்கு இடையே உள்ள வலுவான, குறிப்பாக தாய்-மகள் உறவு ஆண்களை ஆழமாக அச்சுறுத்தி வருகிறது.

சுசானா டானுடா வால்டர்ஸ் (லைஃஸ் டுகெதர் அண்ட் அபார்ட்/Lives Together and Apart) 

நில்மஹ் ஷேக்(1945)

இரா ராஜா மற்றும் கே ஸ்கௌட்டர் இனால் தொகுக்கப்பட்ட ஒரு முடிவற்ற குளிர்கால இரவு (அம்மா-மகள் கதைகளின் தொகுப்பு) மற்றும் ஷஷி தேஷ்பாண்டே வினால் தொகுக்கப்பட்ட தி டார்க் ஹோல்ட்ஸ் நோ டெரர்ஸ் ஆகியவை எதிர்ப்பின் மூலம் கதை சொல்லலுக்கு நாம் பரிந்துரைக்கும் நாவல்கள் ஆகும். குறிப்பாக தி டார்க் ஹோல்ட் நோ டெரர் என்பது ஒரு பெண் கதாநாயகியின் தாய் தன்  மகளை விட மகனை விரும்புவதன் தாக்கத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரசியமான வாசிப்பாக இருக்கும்.

“நீ ஏன் இறக்கவில்லை? நீ உயிருடன் இருக்க, அவன் ஏன் இறந்தான்?"

(தனது மகன் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து தாயிடமிருந்து மகளுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள்) - சஷி தேஷ்பாண்டே எழுதிய தி டார்க் ஹோல்ட்ஸ் நோ டெரர்.

தாய்-மகள் உறவின் தவிர்க்க முடியாத கட்டம், மகள் இளமைப் பருவத்தில் நுழையும் கடுமையான காலமும், தாய் தன் மாதவிடாய் சுழற்சியின் முடிவிற்குள்  நுழையும்  காலமும் ஆகும். தாய்-மகள் உறவைப் பற்றிய நமது புரிதலில் இளமைப் பருவம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற உயிரியல் காரணிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதும் இல்லை அவற்றுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படுவதும் இல்லை.

இலங்கையில் 14-19 வயதுடைய சிங்கள இளம்பெண்கள் மத்தியில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்(SRH) தொடர்பான தாய்-மகள் தொடர்பாடல் பற்றிய நடைமுறை பாங்கு தொடர்பான இந்த கட்டுரை தாய்மார்களுக்கும் அவர்களின் மகள்களுக்கும் இடையில் உள்ள தொடர்பாடல் தடைகளை எடுத்துக்காட்டும் ஒரு ஆய்வாகும்.

இந்த உயிரியல் எதார்த்தங்களின் காரணியாக இருப்பது குறித்து கவனம் செலுத்துதல், தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு இடையே அவர்களின் உடல் மற்றும் மன நலம் குறித்த வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு பரந்த விவாதத்தைத் திறக்கிறது, இதன் விளைவாக இரு பங்குதாரர்களிடையே சிறந்த புரிதல் மற்றும் பச்சாதாபம் அதிகரிக்கிறது.

AMV BBDO: லிப்ரெஸ்ஸிற்கான வலி அகராதி

"தாய்மார்கள் மற்றும் மகள்கள் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றிய துன்பத்துடன் கூடிய உணர்வின் பிரதிபலிப்பைப் பார்க்கிறார்கள்: நீ இருந்திருக்கக்கூடிய அனைத்தும் நான் மற்றும் நான் இருக்கக்கூடிய அனைத்தும் நீ" - தாய்மார்களும் மகள்களும் பெரும்பாலும் ஒருவருக்கொருவரின்  நீட்டிப்புகளாகக் பார்க்கப்படுகிறார்கள். ஜேன் ஃப்ளாக்ஸின், பெண்ணியத்திற்குள்ளான வளர்ப்பு மற்றும் தன்னாட்சிக்கு இடையிலான தாய்-மகள் உறவில் காணப்படும் முரண்பாடுகள் எனும் கட்டுரை, பாலின ஒற்றுமை காரணமாக ஏற்படும் இந்த தொடர்ச்சியான யோசனை, இதனால் ஏற்படும் தொடர்ச்சியான குழப்பம் மற்றும் எல்லைகள் தொடர்பிலான தெளிவற்ற தன்மையை ஆராய்கிறது. 

சமூக-பொருளாதாரக் காரணிகள் மற்றும் பாலினம் சார்த்த பொறுப்புகள் காரணமாக தாய்மார்கள் தாங்கள் பெற்றிராத அல்லது இழந்த வாழ்க்கையினை தங்கள் மகள்கள் மூலம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு, தெளிவற்ற கட்டுப்பாடுகள் வழிவகுக்கின்றன. ஜென்னெட் மெக்கூர்டியால் இன், நான் மகிழ்ச்சி அடைகிறேன் என் அம்மா இறந்தது விட்டார் எனும்  சுயசரிதை நினைவுக் குறிப்பு முன்னாள் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த அவரின் வாழ்கை  அனுபவங்களின் மூலம் இந்த விடயம் தொடர்பான சிக்கல்களை ஆராய்கிறது. ட்ரூ பேரிமோர் உடனான அவரது நேர்காணலில், இரு பெண்களும் புத்தகம் மற்றும் அவர்களின் பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி கலந்துரையாடுகின்றனர்.

படம்: மிச்சிகன் டெய்லி

மறைமுக தெளிவற்ற கட்டுப்பாடுகள் காரணமாக, தாய்-மகள் உறவில் உடல் அமைப்பினை அவமானப்படுத்தல், கருத்துத் தெரிவித்தல், பெண் பிள்ளைகளின் நடத்தைபோக்குகளை அதிகமாக கட்டுப்படுத்தல் மற்றும்  ஆடை தெரிவு கட்டுப்பாடு போன்றவை அடிக்கடி நிகழ்பவையாகவும் பொதுவான காணப்படுபவையாகவும் அமைகிறது.  இந்தியாவில் பெண்ணியம் எனும் நர்மதா கே. எழுதிய இந்தக் கட்டுரை, தாய்மார்கள் ஏன் தங்கள் மகள்களின்  உடல் அமைப்பினை அவமானப்படுத்திடுகிறார்கள்  என்பதற்கான மூல காரணத்தை ஆராய முயற்சிக்கிறது.

கொம்யூன் இந்தியாவிலிருந்து ஒரு கதைப் பகுதியைக் கண்டுபிடித்தோம்; "என் அம்மாவுக்கும் எனக்கும் சிக்கலான ஒரு உறவே இருக்கிறது..."- மஹிதா. இப் பகுதி மிக தொடர்புடையதாகவும் தாய்-மகள் உறவின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும் படம்பிடிப்பதில் வெற்றிகரமானதாகவும் அமைகிறது.

கெய்ல் கிர்ஷென்பாம் தனது "அம்மாவுடன் இனி நாடகம் இல்லை" எனும்  Ted Talk இல், அவரது தாயின் தொடர்ச்சியான விமர்சனங்கள் அவரது "தனிப்பட்ட மற்றும் காதல் உறவுகள்" உட்பட அவரது வாழ்க்கையின் "பல அம்சங்களில்" ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்கிறார்.

“என் அம்மாவின் கூற்றுப்படி, என்னால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை, என் சகோதரர்களால் எதையும்  தவறாக செய்ய முடியவில்லை. என் மூக்கு பெரிதாக இருந்தது; என் தலைமுடி மிகவும் உலர்ந்தததாக இருந்தது; மேலும் என் பிட்டம் மிகவும் பெரிதாக இருந்தது.”

- கெய்ல் கிர்ஷென்பாம்.

"என் மூக்கு"என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை தயாரித்து, கிர்ஷென்பாம் தனது தாயால் உடல் அமைப்பு தொடர்பில் அவமானப்படுத்தப்பட்ட  அனுபவங்களைத் தொடர்ந்து ஆராய்ந்தார்: "எனது மூக்கு சரியாக இருந்திருந்தால் நான் மகிழ்ச்சியாக திருமணம் செய்து வெற்றியுடன் வாழ்வேன் என்று என் அம்மா எப்போதும் நினைத்தார்."

Lady Bird (2017) என்பது, எமது தாய்மார்கள் மற்றும் மகள்கள் வாசிப்புப் பட்டியலில் முக்கியமான ஒன்றாகும். இதில் மனதைக் கவரக்கூடிய  வாழ்வில் உண்மையாகக் கண்ட குறிப்பிட்ட ஒரு காட்சி  "டிரஸ்ஸிங் ரூம் காட்சி."

வேலை மற்றும் திருமணம்: அஞ்சு மல்ஹோத்ரா மற்றும் ஏமி ஓங் ட்சுய் ஆகியோரின்  இலங்கையில் தாய்-மகள் ஒற்றுமைகள் எனும் கட்டுரையானது, தாய்மார்களுக்கும் மகள்களுக்கும் இடையிலான உறவு மற்றும் இலங்கையில் தொழில் மற்றும் உறவுகள் மீதான ஒருவருக்கொருரின் பார்வை  தொடர்பிலான தாக்கங்களை ஆராயும் ஒரு ஆய்வாகும்.

“தன் மகள் தொடர்பில், அவள் தன்னை அறியாமலேயே தன் சொந்த தாயுடன் அனுபவிக்கும் பல தெளிவற்ற தன்மைகளையும் அடையாளங்களையும் மறுபரிசீலனை செய்கிறாள். தாய் தன் மகளை ஒரு தனி நபராக  பார்ப்பதை விட பொதுவாக தனது ஒரு நீட்சியாகவே தொடர்புபடுத்த முனைகிறாள். . . . தாய் மற்றும் மகளின் பரஸ்பரமாக  வலுப்படுத்தப்படும் அடையாளங்கள், ஆண்களை விட பிற்காலத்தில் பெண்கள் தனக்கான ஒரு தனி அடையாள உணர்வைப் பெறுவதற்கான காரணமாக அமைவதோடு ஆண்களைப் போல மற்றவர்களிடமிருந்து உறுதியாக தனித்து செல்லும் உணர்வை ஒருபோதும் பெறுவதில்லை. “

- ஐரிஸ் யங் “நான்சி சோடோரோவை” சுருக்கமாகக் கூறுகிறார் ("ஆண் ஆதிக்கத்திற்கு ஆண் பாலின அடையாளம் காரணமா?" Treblicot, Mothering)

தாய்-மகள் உறவில் ஏற்படும் எதிர்மறையான அனுபவங்களின் பரவலானது மகள்களில் "அவர்களின் தாயைப் போலவே" ஆகிவிடுவோம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது, இது பெண்ணியக் கோட்பாட்டாளர்களால் மேட்ரோபோபியா என்று குறிப்பிடப்படுகிறது. உம்மா ந்த கருப்பொருளை ஆராயும் ஒரு த்ரில்லர் (haunting-thriller ) திரைப்படம் ஆகும்.

கிரே இன் அனாடமி (Grey’s Anatomy) என்பது மேட்ரோபோபியா கருப்பொருளில் அமைந்த ஒரு தொலைக்காட்சித் தொடராகும்.

"மெரிடித் கிரே:- "நாங்கள் அவர்களைப் போல் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? எங்கள் தாய்மார்கள்?

கிறிஸ்டினா யாங்: (ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் மெரிடித்தை வெறுப்புடன் பார்க்கிறாள்")

தாய் மற்றும் மகள்களுக்கு இடையே உள்ள தெளிவற்ற எல்லைகளை கடக்க, தனக்கான அடையாளம், தனித்துவம் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் உணர்வை பெண்கள் வளர்ப்பதற்கு அனுமதிப்பதும் ஊக்குவிப்பதும் இன்றியமையாதது.

ஒரு சமூகமாக, தாய்மார்கள் பெரும்பாலும் தாய் எனும் தங்களது பாத்திரத்திற்கு மட்டுப்படுத்தப்படுகிறார்கள், மேலும் மகள்கள் என்ற முறையில் அவர்களுக்கு அவர்களின் சொந்த வாழ்க்கை, அவர்களின் சொந்த கதைகள் மற்றும் நினைவுகள் உள்ளன என்பதை அங்கீகரிக்காமல் நாம் தொடர்பிலான விடயங்களில் அவர்களின் பங்கினை  மட்டுப்படுத்துகிறோம். ஒருவரையொருவர் தனிமனிதர்களாக வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை, பெண்களை அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை தாண்டி (நாம் உரிமையுடையவர்களாகக் கருதுவதற்குப் பதிலாக), அவர்களையும் தனிமனிதராகப் பார்க்க முயலும்போதே பூர்த்தி செய்யப்படும். 

பராமரிப்பு வேலை மற்றும் தாய்மை பற்றிய எவ்ரிஸ்டோரி ஸ்ரீ லங்காவின் வாசிப்பு பட்டியல் இந்த கருத்தினை விரிவான முறையில் ஆராயும் படைப்புகளை வழங்குகிறது.

"அவர்களுக்குள் இருக்கும் தாய் மற்றும் மகள் இருவரையும் ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைத்து பலப்படுத்தி, தாய்-மகள் பிணைப்பை மீண்டும் ஒருங்கிணைப்போம்."

- அட்ரியன் ரிச்

தி ஐடியல்ஸ் ஆஃப் மதர்ஹூட் இல்  இருந்து“"ஒரு தாய் புதிதாக திருமணமான தனது மகளுக்கு ஆறுதல் கூறுகிறார்"  https://www.exoticindiaart.com/article/motherhood/

தாய்-மகள் உறவுகளில் மறைந்த மற்றும் எதிர்மறையான கண்ணோட்டம் இருந்தபோதிலும், பெண்ணியவாதிகள் என்ற முறையில், பெண்கள் மற்ற பெண்களைப் பாராட்டாமல் இருக்கவும், குறை கூறவும் காரணமான கட்டமைப்பு காரணிகளின் பங்கை நாம் வெளிக்கொணர வேண்டும். இந்தக்  கருத்தானது அட்ரியன் ரிச் மற்றும் ஜூடிதா அர்கானா போன்ற பெண்ணிய கோட்பாட்டாளர்களால் ஆராயப்படுகிறது.

எது வந்தாலும் ' மிகவும் எளிதாகவும், அடங்கி போவதாகவும்’ 'ஏற்றுக்கொள்ளும் தன்மை காரணமாக, பல மகள்கள் தங்கள் தாய்மார்கள் மீது கோபத்தில் வாழ்கிறார்கள். ஒரு தாயின் பலிவாங்கல் அவளை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, ஒரு பெண்ணாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று அவளைப் பார்க்கும் மகளை அது சிதைக்கிறது. . . . . தாயின் சுய வெறுப்பு மற்றும் குறைந்த எதிர்பார்ப்பு ஆகியவையே மகளின் உளவியல் மற்றும் உணர்ச்சி நிலையின் வரையறைகளை உருவாக்குகிறது.”

-அட்ரியன் ரிச்

தாய்-மகள் உறவுகளுக்கு ஆணாதிக்கத்தின் தாக்க்கம் எனும் அலெக்ஸாண்ட்ரா டி அமோரின் ஆக்கம் இக் கருத்தினை ஆராயும் பிரதிபலிப்பாகும்.

ஆணாதிக்கத்தின் கீழ் பெண்களின் அடக்குமுறையின் சுழற்சியை உடைப்பதற்கு இந்த உறவு ஒரு திறவுகோல் என்பதையும், தலைமுறை தலைமுறையாக சுழற்சி முறையில் கடத்தப்படும் இந்த மன உளைச்சலை  உடைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் நாம் அங்கீகரிப்பது அவசியம். சேவிங் ஃபேஸ் (2004) , எனும் திரைப்படம் ஒரு சீன தாய் மற்றும் மகள் சமூக எதிர்பார்ப்புகளை ஒன்றாக எதிர்க்கும் கதையைப் வெளிப்படுத்துவதோடு, இந்த எதிர்ப்புப் பயணத்தின் மூலம், முறிந்த அவர்களது உறவை சரிசெய்ததையும் எடுத்துக்காட்டுகிறது.

"ஆயிரக்கணக்கான மகள்கள் தங்கள் தாய்மார்களுக்கு சமரசம் மற்றும் சுய வெறுப்பு  கற்பிக்கப்பட்டிருப்பதாக பார்க்கிறார்கள், அவர்கள் சுதந்திரமாக வெற்றி பெற போராடுகிறார்கள். அதாவது யாரின் மூலம் ஒரு பெண்ணின் இருப்புக்கான கட்டுப்பாடுகள் மற்றும் குறை மதிப்புகள் வலுவாக கடத்தப்படுகின்றனவோ அவர்களிடம் இதை பார்க்கிறார்கள்.  இதன் மூலம்  ஒரு தாயை வெறுத்து நிராகரிப்பது, அவளுக்கு அப்பால் அவள் மீது செயல்படும் சக்திகளைப் பார்ப்பதை விட மிகவும் எளிதானது.”

-Judith Arcana (Our Mother’s Daughters)

இங்கிலீஷ் விங்கிலீஷ் (2012) என்பது, நம் தாய்மார்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில்  தனிமனிதர்களாக அடையாளம் காண உதவும் ஒரு ஒரு சிறந்த திரைப்படமாகும், அவர்கள் ஒரு தனிமனிதர் என்பதால் மரியாதைக்குரியவர்கள், அவர்கள் ஒரு தாயாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அல்ல. படம் பின்வரும் மேற்கோளை உள்ளடக்கியுள்ளது;

“பெரும்பாலும் அப்பாவும் மகளும் சேர்ந்து தாயை (பெண்ணை) இழிவாகப் பார்க்கிறார்கள். அவள் ஒரு கருத்தை தவறவிட்டால் அவர்கள் அர்த்தமுள்ள பார்வைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அவள் அவர்களைப் போல பிரகாசமாக இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் போல் அவளால் விடயங்களை விளக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கூட்டு, தாயின் தலைவிதியிலிருந்து மகளை காப்பாற்றாது.”

- போனி பேர்ஸ்டோ, தீவிர பெண்ணிய சிகிச்சை: வன்முறை சூழலில் செயற்படுகையில் (Burstow, Radical Feminist Therapy: Working in the Context of Violence)

We found Brown Skin Girl featured in The Lion King: The Gift (Deluxe Edition) album, sung by an African American mother to her daughter, empowering her to embrace her skin and heritage to be a powerful message.


கதை சொல்லும் பகுதி

பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் எதிர்ப்பின் வலிமையான வடிவங்களில் ஒன்று என்று நாங்கள் (எவ்ரிஸ் ஸ்டோரி) நம்புகிறோம். இந்த உணர்வில், நாங்கள் இக் கட்டுரையை பரிந்துரைக்கிறோம்; "கப் ஆஃப் ஜோ" வெளியிட்ட "மூன்று பெண்கள் தங்களின் சிக்கலான தாய்/மகள் உறவுகளை விவரிக்கிறார்கள்".

"OCD உடைய ஒரு அம்மாவுடன் வளர்வத" எனும் நகைச்சுவை கதையோட்டம் ரூத் சானின் பிரதிபலிப்பாகும்.

எங்கள் வேலைகளை பின்பற்றுபவர்களிடம் தங்கள் தாய்மார்களுடனான உறவைப் பற்றிய அவர்களின் சொந்தக் கதைகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்; இந்த கதைகளை எங்கள் மீடியம் (Medium) கணக்கில் படிக்கலாம்.

கவிதைப் பகுதி

சுசி தாரு மற்றும் கே. லலிதாவின் கவிதைகள் — இந்தியாவில் பெண்கள் எழுதுதல்: 600 B.C.  முதல் தற்போது வரை


எங்கள் "அம்மாக்களும் மகள்களும்" வாசிப்புப் பட்டியலுக்கு, பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறோம்;

நாவல்கள்:

ஆரஞ்சுகள் மட்டுமே பழம் அல்ல (1985) - ஜீனெட் வின்டர்சன். ஆங்கில பெந்தேகோஸ்தே சமூகத்தில் வளரும் ஒரு லெஸ்பியன், தன் தாயுடன் பகிர்ந்து கொள்ளும் சிக்கலான உறவில் போராடுவதைப் பற்றிய, வயதுக்கு வருவது தொடர்பிலான கதை. (லக்மஹால் சமூக நூலகத்தில் கிடைக்கும்)

புண்யகாந்தே விஜேநாயக்க எழுதிய "காத்திருக்கும் பூமி" நாவலின் அட்டைப்படம்(இடது)  https://cinderzena.wordpress.com/2017/02/05/a-compilation-of-sri-lankan-literature/comment-page-1/, புண்யகாந்தே விஜேநாயக்க (வலது) https://archives.sundayobserver.lk/2011/05/22/mon20.asp

காத்திருக்கும் பூமி (1996) — புண்யகாந்தே விஜேநாயக்கபுண்யகாந்தே விஜேநாயக்க ஒரு இலங்கை எழுத்தாளர் ஆவார், இவரின் இந்த நாவல் 1960 களின் மீள்குடியேற்றத்தின் மத்தியில் ஒரு விவசாய குடும்பம் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பிரதிபலிக்கிறது. இந்த நாவலில் சிறப்பான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் “புன்யகாந்தே விஜேநாயக்காவின் தி வெயிட்டிங் எர்த் புத்தகத்தின், அன்னிய எதிரிகள்: தாய்-மகள் உறவின் ஒரு பகுப்பாய்வு" எனும் நேஷாந்த ஹரிச்சந்திரவின் பகுப்பாய்வு கட்டுரை, புத்தகத்தையும் இந்த மாத கருப்பொருளையும் பாராட்டுவதற்கான சிறந்த துணையாக இருப்பதைக் கண்டோம்.                 

மிஷேல் சானார் இன் க்ரயிங் இன் H  மார்ட்  

டெபோரா லெவியின் ஹாட் மில்க் 

லிட்டில் வுமன் (1868) - லூயிசா மே அல்காட்

தி ஜாய் லக் கிளப் (1989) - ஏமி டான்

டிபிகள்ட் டாடர்ஸ் (1998) — மஞ்சு கபூர்::நாவல்களின் இலக்கியப் பகுப்பாய்வில் ஆர்வமுள்ளவர்களுக்கு, P. சாமுவேல் மற்றும் P. ஹெப்சிபா ஆகியோரின் "மஞ்சு கபூரின் டிபிகள்ட் டாடர்ஸ் இல் தாய்-மகள் உறவுகள்" பயன்தரும் என நம்புகிறறோம்.


சிறுகதை

"எவ்ரிடே யூஸ்" (1973) - ஆலிஸ் வாக்கர், இன் லவ் அண்ட் ட்ரபிள் தொகுப்பில் வெளியிடப்பட்டது.


திரைப்படங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற எவ்ரிவேர்வேர் ஆல் அட் ஒன்ஸ் (2022) திரைப்படம் தாய்மார்கள் மற்றும் மகள்கள் என்ற கருப்பொருளுக்கான எங்களின் முக்கிய உத்வேகங்களில் ஒன்றாகும்.

"உங்கள் மகள் உணர்ந்த அனைத்தையும் நான் உணர்ந்திருக்கிறேன், நீங்கள் என் தாயாக இருப்பதன் மகிழ்ச்சியையும் வலியையும் நான் அறிவேன்."

— ஜோபு துபாக்கிஇலையுதிர் சொனாட்டா (1978)


தி லாஸ்ட் டாட்டர் (2021) ஒரு வயதான பெண், இத்தாலியில் ஒரு பயணத்தில் இருக்கும் போது இன்னொரு பெண்ணையும் அவரது இளம் மகளையும் சந்தித்து அவர்களில் தன்னை அடையாளம் கண்டுகொண்டதன் மூலம் அனுபவிக்கும் சுய பிரதிபலிப்பு பயணத்தைத் எடுத்துக்காட்டுகிறது . தாய்மை தொடர்பிலான குற்ற உணர்வு மற்றும் அவமானத்தின் கோணத்தில் தாய் மற்றும் மகள்ள் எனும் கருப்பொருளை கதை ஆராய்கிறது. "த லாஸ்ட் டாட்டர்' தாய்மை தொடர்பிலான குற்ற உணர்வை எவ்வாறு நிவர்த்தி ெய்கிறது" என்பது வாசிப்பதற்கு நாம் பரிந்துரைக்கும் கொலிடரின் ஒரு கட்டுரையாகும்.

லிட்டில் வுமன் (2019)

த ஜோய் லக் க்ளப் (1993)

லேடி பேர்ட் (2018)

கோரலைன் (2009)

பிரேவ் (2012)

அடோனும் சொனாட்டா (1978)

“தாயின் காயங்கள் மகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. தாயின் தோல்விகளுக்கு மகளே விலை கொடுக்கிறாள். தாயின் மகிழ்ச்சியின்மை மகளின் மகிழ்ச்சியின்மையாக இருக்கும். இது தொப்புள் கொடி ஒருபோதும் வெட்டப்படாதது போன்றது."

ஆவணப்படம்

மதர்ஸ் அன்ட் டாடர்ஸ் மிரர்ஸ் தட் பைண்ட்  (2001)

தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

கில்மோர் கேர்ள்ஸ் (2000–2007)

கிரேஸ் அனாடமி (2005 — திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது)

பிக் லவ் (2006–2011)

கோல்டன் கேர்ள்ஸ் (1985–1992)

21 ஆம் நூற்றாண்டின் பிரைம்-டைம் தொலைக்காட்சியில் தாய்-மகள் உறவுகளுடன் பார்வையாளர்களின் ஈடுபாடு: விளக்கம், உணர்வு உருவாக்கம் மற்றும் உணரப்பட்டவை பற்றிய தரமான ஒரு பகுப்பாய்வு என்பது தாய்மார்கள் மற்றும் மகள்கள் தொடர்பில் மேலே பட்டியலிடப்பட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் வெளிப்படுத்திய  எதிர்வினைகள் மற்றும் பதில்களை சாட்சியங்களுடன் எடுத்துக்காட்டுகிறது.

மேலதிக வாசிப்பு - தாய்-மகள் உறவுகள் பற்றிய பெண்ணியக் கோட்பாடுகள்

சுசானா டானுடா வால்டர்ஸ் இன் ஒன்றாகவும் பிரிந்தும் வாழ்கிறார்கள்: பெண்ணியக் கோட்பாடுகள், அவற்றின் குறைபாடுகள் மற்றும் விமர்சனங்கள் பற்றிய அறிமுகம் - ஃப்ராய்டியன்(Freudian Model ) மாதிரியிலிருந்து பெண்ணியத்தை கையகப்படுத்துதல் வரையிலான பரிணாமத்தை ஆராய்கிறது, பெண்ணியக் கோட்பாட்டாளர்களின் குறிப்பிடத்தக்க மற்றும் புரட்சிகரமான படைப்புகளை அறிமுகப்படுத்துவதோடு அதில் உள்ள குறைபாடுகளையும் விமர்சனங்களளையும் சுட்டிக் காட்டுகிறது

அன்றியென்னே ரிச் இன்  இட் இஸ் ஹார்ட் டு வ்ரைட் அபௌட் மை  மதர் 

அன்றியென்னே ரிச்:  https://lithub.com/adrienne-rich-it-is-hard-to-write-about-my-own-mother/

ப்ரொம் “லிட்டில் வுமன்” (2019)